×

ஒட்டன்சத்திரத்தில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க நடவடிக்கை அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் பேச்சு

திண்டுக்கல், ஏப். 11: திண்டுக்கல் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, கள்ளிமந்தையம் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து பேசியதாவது: ஒட்டன்சத்திரம்  பகுதி மக்களின் உயிர்நாடியே விவசாயம்தான். கேரள மாநிலத்தின் 90 சதவீதம்  காய்கறிகளை இப்பகுதி விவசாயிகள்தான் தருகின்றனர். ஆனால் விளைந்த  பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மேலும்  காய்கறிகளை பதப்படுத்தி வைக்க முடியாமல் கிடைத்த விலைக்க அன்றே விற்பனை  செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவலத்தை போக்க  விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், குளிர்பதன கிட்டங்கி அமைப்பதற்கும்  நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரத்தின் குடிநீர்  பஞ்சத்திற்கு காரணம் பரப்பலாறு அணை 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதே.  இதனால் குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்குகின்றனர்.

மேலும் பாசனத்திற்கு  தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இந்த நிலை மாற  பரப்பலாறு அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரத்தில்  தினமும் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு நகராட்சிக்கு இடம் இல்லை. இதனால்  ரோடுகள், பாழடைந்த கிணறுகளை தேடி, தேடி கொட்டுகின்றனர். இதனால் நோய்  பரவுவதுடன் நீராதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே குப்பை கொட்டுவதற்கு  தனியாக இடம் தேர்வு செய்யப்படும். வாகரை சோள ஆராய்ச்சி நிலையம் தரம்  உயர்த்தப்பட்டு விவசாயிகள் விளைவிக்கப்படும் சோளத்தை அரசே விலை நிர்ணயித்து  வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். உடன் மேற்கு மாநகர்  மாவட்ட செயலாளர் நல்லுசாமி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர்  தண்டபாணி, பேரவை செயலாளர் குமாரசாமி உள்பட பலர் இருந்தனர்.

Tags : Jyothi Murugan ,Amritha ,cold rolling ,Odin ,
× RELATED தென்றல் வந்து தீண்டும் போது.! நடிகை அம்ரிதா அய்யர் அழகிய புகைப்படங்கள்